தொடரும் பண்டிகை நாட்களால் சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் அதிகரிப்பு!!

தொடர் பண்டிகை நாட்களையொட்டி சென்னை மெட்ரோ ரயில் சேவையின் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் காலை 7 மணி முதல் இரவு 9 வரை தற்போது இயக்கப்படுகின்றன. பண்டிகை விடுமுறையையொட்டி இன்றும், நாளையும் காலை 7 மணி முதல் இரவு 9 வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை, இரவு 11 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.
அதுபோல், விடுமுறை முடிந்து திரும்பும் பயணிகள் வசதிக்காக வரும் 27-ம் தேதி காலை 7 மணிக்கு இயக்கப்பட வேண்டிய மெட்ரோ ரயில்களின் சேவை அதிகாலை 5.30 மணிக்கே தொடங்கப்படும்.
தொடர் விடுமுறை காரணமாக வரும் 29-ம் தேதி அன்று காலை 7 மணி முதல் இரவு 9 வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில்களின் சேவை இரவு 11 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.அதுபோல், நவ.2-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
நீட்டிக்கப்பட்ட நேரங்களில் மெட்ரோ ரயில்களின் சேவைகள் உச்ச நேரம் (பீக் ஹவர்) இல்லாமல் இயக்கப்படும்.