அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – தெலுங்கானா முதல்வர் அதிரடி அறிவிப்பு

தெலுங்கானாவில் 9 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, பரிந்துரைக்கு முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் ஒப்புதல் அளித்துள்ளார்.
அரசு ஊழியர்கள், உதவி ஊழியர்கள், தினசரி ஊதிய ஊழியர்கள், நிரந்தர ஊழியர்கள் என அனைவர்க்கும் சம்பளத்தை அதிகரிக்கவும், ஓய்வூதியத்தை அதிகரிக்கவும், அரசில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்பவும், பதிவி உயர்வுகளுக்கான திருத்தப்பட்ட கொள்கைகளை கொண்டுவரவும் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் முடிவு செய்துள்ளார்.
இதற்காக தலைமை செயலாளர் சொமேஷ் குமார் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு கலந்துரையாடலின் அடிப்படியில், இந்த முடிவுகளை நிறைவேற்றவும், அதற்கான சட்ட சிக்கல்களை நிவர்த்தி செய்யவும் முதலமைச்சருக்கு பரிந்துரை செய்யும். இதன் மூலம் 9,36,976 ஊழியர்கள் பயனடைவர். மேலும் தேவைப்பட்டால் சாலை போக்குவரத்து கழகத்தின் நிதி சுமையையும் மாநில அரசே ஏற்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிப்ரவரி 2-ந் தேதி முதல் அரசு ஊழியர்கள் மறியல், சிறை நிரப்பும் போராட்டம் உள்ளிட்ட போராடங்கள் குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் அன்பரசு அறிவித்துள்ளார். இந்த சூழலில் தமிழகத்திலும் இதுபோல அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.