உள்நாட்டு பயங்கரவாதம் ஒடுக்க பிடன் அமைச்சர் உறுதி

அமெரிக்க பார்லிமென்ட் தாக்குதல் போன்ற உள்நாட்டு பயங்கரவாத செயல்களை எதிர்த்து போராட தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும்’ என்கிறார், பிடன் அரசில் உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரியாக பொறுப்பேற்கும் மேயர்காஸ். 

பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறுவதற்காக வருபவர்களை திருப்பி அனுப்பும் முந்தைய டிரம்ப் அரசின் செயல்பாடுகளை முடிவுக்கு கொண்டு வர பிடன் அரசு உத்தரவிட்டுள்ளது. 

அதற்கான பணிகளை தீவிரப்படுத்தப் போவதாக மேயர்காஸ் தெரிவித்துள்ளார். டிரம்ப் உத்தரவுபடி, மெக்சிகோவில் இருந்து அகதியாக வந்த 65 ஆயிரம் பேர், திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

அமெரிக்க அரசின் கம்ப்யூட்டர் இணைப்புகளில், சீனர்கள், ரஷ்யர்கள் புகுந்து தகவல்களை திருடும் பிரச்னைக்கு முடிவு கட்டவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மேயர்காஸ் தெரிவித்தார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x