நைட்ல தூக்கம் வரமாட்டேங்குதா..? இத ஃபாலோ பண்ணுங்க

இரவில் தூங்கும் போது நாம் சில விஷயங்களை கவனமாக பார்க்கவேண்டும். குறிப்பாக நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் கவனம் இருக்கவேண்டும்.

நாம் உட்கொள்ளும் உணவு தூக்கப் பிரச்சினைகள் உண்டாக வாய்ப்புள்ளது. எனவே இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற என்ன செய்ய வேண்டும் என்பதை இதில் பார்ப்போம். சிலர் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தாலும் கூட தூக்கம் வராமல் தவிப்பார்கள். நிறைய பேர் தூக்கம் வருவதற்காக தூக்க மாத்திரை எடுத்துக் கொள்கின்றனர். இதெல்லாம் மிகவும் தவறான வழி. தூங்குவதற்கு முன்பு நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு எப்படி கவனம் செலுத்த வேண்டும் என அறிந்து கொள்ளுங்கள்.

ட்ரிப்டோபன் உணவுகள்

பொதுவாக பால் உணவுகளில் ட்ரிப்டோபன் உள்ளது.
இது தூக்கத்தை ஊக்குவிக்கும் பொருளாகும். பால், நட்ஸ் வகைகள், விதைகள், வாழைப்பழம், தேன் மற்றும் முட்டை போன்ற உணவுகள் எடுத்துக் கொண்டால் நல்ல தூக்கம் வரும். கார்போஹைட்ரேட் உணவுகள் சீஸ் மற்றும் கிராக்கர்ஸ் சிற்றுண்டியாக எடுக்கலாம். தானியங்கள், பால் மற்றும் சீஸ் இவற்றை சேர்த்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

படுக்கைக்கு முன் சிற்றுண்டி

உங்களுக்கு ஏற்கனவே தூக்கமின்மையை என்னும் இன்சோம்னியா பிரச்சினை இருந்தால் தூங்குவதற்கு முன்பு சிறிதளவு உணவை எடுத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும். ஒரு டம்ளர் பால் குடிப்பது உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். ஆனால் உங்கள் சிற்றுண்டி சிறியதாக இருக்கவேண்டும். இரவில் லேசான உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.

கொழுப்பு உணவுகள்

கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு, கொழுப்பு உணவு செரிமானத்தை தாக்கும். இதனால் தூக்கத்தின் இடையில் அடிக்கடி பாத்ரூமுக்கு செல்ல வைக்கும். அதிக கொழுப்புள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டாம்.கொழுப்பு உணவுகளை மறந்து விடுங்கள். நான்கு முதல் ஆறு மணி நேரத்துக்கு முன்பு உங்கள் உணவில் இருந்து கொழுப்பு உணவுகளை நீக்குங்கள்.

ஆல்கஹாலை தவிருங்கள்

ஆல்கஹால் குடிப்பதால் நிறைய பேர் வேகமாக தூங்க முடியும் என நம்புகின்றனர். அதே சமயத்தில் நீங்கள் அடிக்கடி பாத்ரூம் இருக்கு செல்ல நேரிடும். தலைவலி, இரவு வியர்வை மற்றும் கனவுகள் கூட வரலாம். கண்டிப்பாக ஆல்கஹால் தேவை என்றால் ஒவ்வொருவருக்கும் ஒரு கிளாஸ் தண்ணீர் சேருங்கள். ஆனால் ஒரு நல்ல இரவு படுக்கைக்கு 4 முதல் 6 மணி நேரத்திற்கு முன்பு மதுவை தவிர்ப்பது நல்லது.

காரமான உணவுகள்

காரமான உணவுகளை தவிர்க்கவும் தூங்கும் போது செரிமானம் மெதுவாக நடந்தால் அது உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். உங்களுக்கு நெஞ்செரிச்சலுக்கு வழிவகுக்கும். தூங்குவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு காரசாரமான உணவுகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. நீர் ஆகாரங்களை எடுத்துக் கொண்டால் அடிக்கடி பாத்ரூமில் அடிக்கடி செல்ல நேரிடும். சிறுநீர் கழிப்பதால் தூக்கம் பாதிக்கும்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x