‘இனி எந்த தொடர்பும் இல்லை…’ உலக சுகாதார நிறுவனத்தை கைகழுவிய அமெரிக்கா

உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியதற்கான கடிதத்தை, ஐ.நா., பொதுச் செயலரிடம், அமெரிக்கா கையளித்தது.
‘கொரோனா பரவலுக்கு சீனா தான் காரணம்’ என, அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.’ ஆனால், உலக சுகாதார நிறுவனம், ‘இந்த விஷயத்தில் சீனா மீது எந்த தவறும் இல்லை’ என்றது. அதுமட்டுமின்றி, கொரோனா விஷயத்தில் முன்னுக்கு பின் முரணனான தகவல்களை வெளியிட்டு உலக சுகாதார நிறுவனம், உலக அரசுகளை குழப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால், ஆத்திரம் அடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘உலக சுகாதார நிறுவனம், சீனாவின் கிளை அமைப்பு போல் செயல்பட்டு வருகிறது.’எனவே, அந்த அமைப்பிற்கு அளிக்கும் நிதியை நிறுத்த முடிவு செய்துள்ளோம்; அந்த அமைப்பிலிருந்தும் விலகுகிறோம்’ என, மே மாதம் அறிவித்தார்.
இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியதற்கான கடிதத்தை, அமெரிக்க பிரதிநிதி, ஐ.நா., பொதுச் செயலரிடம் அளித்து உள்ளார்.
ஐ.நா., பொதுச் செயலரின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்: “உலக சுகாதார நிறுவனத்திலிருந்து விலகுவதாக, ஐ.நா., பொதுச் செயலருக்கு அமெரிக்கா சார்பில் கடிதம் தரப்பட்டுள்ளது. கடந்த, 1946ல், ஐ.நா., சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு விலகுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது; இந்த நடவடிக்கை, உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. ” என்று அதில் கூறப்பட்டுள்ளது