ஏழு மாதங்களுக்குப் பின் மெக்காவில் அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு யாத்திரீகர்கள்!!!

இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவில் ஏழு மாதங்களுக்குப் பின் முதன்முறையாக, வெளிநாட்டு யாத்திரீகர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
கொரோனா பரவலை அடுத்து, சவூதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்கு வர யாத்திரீகர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. கொரோனா ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு, கடந்த மாதம் முதல் உள்நாட்டில் இருப்பவர்களுக்கு மட்டும் மெக்காவிற்கு வர அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், 7 மாதங்களுக்குப் பின் முதன் முறையாக, மெக்காவிற்கு வெளிநாட்டு முஸ்லிம் யாத்திரீகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.முதல் நாளில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,000 பேர் உம்ரா என அழைக்கப்படும் யாத்திரை செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், மெக்காவுக்கு செல்லும் முன், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் சவூதிக்குள் வந்த பின் 3 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.