9900 படுக்கைகள் காலி; டில்லி முதல்வர் தகவல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட மாநில பட்டியலில் டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. எனினும், தற்போது 9900 கொரோனா படுக்கை காலியாக உள்ளது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கெஜ்ரிவால் கூறுகையில், “மிகமிக குறைந்த மக்களுக்கே மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுகிறது. அதிகமான மக்கள் வீட்டிலேயே குணமடைந்து விடுகிறார்கள். தற்போது கொரோனாவால் பாதிக்கப்படும் அதிகமானோருக்கு எந்த அறிகுறியும் இல்லை.

கடந்த ஒரு வாரமாக தினந்தோறும் 2300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். ஆனால், ஒருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனை வரவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெறுவர்கள் 6200-ல் இருந்து 5300 ஆக குறைந்துள்ளது.

சமீபத்தில், 10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவ முகாமை தயார் செய்தோம். எனினும், தற்போது 9900 கொரோனா படுக்கை காலியாக உள்ளது. வீட்டில் இருந்தே சிகிச்சை பெறுகின்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.

ஊடகங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் என்பது காட்டப்பட்டாலும், பெரும்பாலானோருக்கு அறிகுறிகளே இல்லை, தாமாகவே குணமடைந்து விடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x