பல கோடிக்கு சொந்தக்காரியாக இருந்தும் பிச்சை எடுத்த பெண்மணி… கைது செய்த போலீசார்!!

பிச்சைக்காரர்கள் என்றால் குடும்ப வறுமை காரணமாகவோ அல்லது குழந்தைகளுக்காக, ஒதுக்கப்பட்ட நிலைமையில் இருந்தாலோ தான் அந்த தொழிலை செய்ய வருவார்கள்.
ஆனால், பல கோடிகளுக்கு சொந்தக்காரராக இருந்தும் எகிப்தில் ஒரு பெண்மணி பிச்சை எடுத்து வந்துள்ளார். எகிப்து நாட்டை சேர்ந்த 57 வயதுடைய நபீஷா எனும் இப்பெண்மணி 5 சொந்த வீடுகளை கொண்டவர். எகிப்து மதிப்பில் 3 பில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களையும், இந்திய மதிப்பில் 1.4 கோடிக்கும் அதிகமாக சொத்துக்களை கொண்டவர். ஆனால், இவர் தெரு ஓர பிச்சைக்காரியாக வாழ்ந்து வருகிறார்.
இவர் குறித்து தகவலறிந்த போலீசார் நடத்திய விசாரணையில் இவை அனைத்தும் உண்மை என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இந்த பெண்ணை தற்பொழுது கைது செய்துள்ள போலீசார் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜர்படுத்தியுள்ளனர்.