வெள்ளக்காடாக மாறிய கொரோனா தாயகம்!

சீனாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளிலும், ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியிலும் பெய்துவரும் கனமழை காரணமாக பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
கொரோனாவின் பிறப்பிடம் என்று அழைக்கப்படும் ஹுபெய் மாகாணம் தற்போது வெள்ளக்காடாக மாறியுள்ளது. அங்கு பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து உலகின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான Three Gorge-ல் இருந்து திடீரென தண்ணீர் திறந்துவிடப்பட்டது. உலகிலேயே மிக நீளமான யாங்சி நதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஊஹான் உள்பட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் 25000 தீயணைப்பு வீரர்கள், 4200 பொதுமக்களை மீட்டனர். சீனாவில் ஜூன் மாதம் மட்டும் கனமழை வெள்ளத்தால் 106 பேர் உயிரிழந்துள்ளனர். 13000 வீடுகள் சேதமடைந்த நிலையில், ஒன்றரை கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், யாங்சி ஆற்றில் வெள்ள நீர் அபாய அளவை தாண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதே போல, ஜப்பான் நாட்டின் குமாமோட்டோ மற்றும் ககோஷிமா பகுதிகளில் கனமழை வெள்ளத்தால் 75,000 மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஜப்பானிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 8000 வீடுகளில் மின்சாரம் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர்