தங்க சுரங்கத்தில் திடீர் நிலச்சரிவு- குழந்தைகள் உட்பட 50 பேர் பலி!

தங்கம், வைரம் என இயற்கை வளங்களுக்கு குறைவில்லாத ஆப்பிரிக்காவில் கனிம சுரங்களின் எண்ணிக்கையும் அதிகம்.
அங்குள்ள காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்கு பகுதியில் உள்ள கமிட்டுகா என்ற இடத்தில் தங்க சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது.டெட்ராய்ட் என்ற அந்த சுரங்கத்தில் தொடர் மழை காரணமாக நேற்று மதியம் 3 மணி அளவில் திடீர் மண்சரிவு ஏற்பட்டதையடுத்து அங்கு பணியில் இருந்த ஏராளமானோர் மண்ணுக்கு அடியில் சிக்கியினர்.
இதையடுத்து மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்றன. இந்த விபத்தில் சிக்கி 50 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தற்போதைய தகவலின் படி ஒருவர் மட்டுமே படுகாயத்துடன் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.தொடர்ந்து நிலச்சரிவில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இதேவேளை சுரங்கத்தில் பணியாற்றிய தங்களது உறவினர்களின் நிலை குறித்து அறிவதற்காக ஏராளமானோர் அங்கு குவிந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.