அமெரிக்காவுக்கு அடுத்து பிரான்ஸில் ஒருநாளில் 52,518 பேருக்கு கொரோனா பாதிப்பு!!

உலக நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்ததாக பிரான்ஸில் ஒருநாள் பாதிப்பு அதிகமாக உள்ளது. பிரான்ஸில் ஒரே நாளில் 52,518 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,73,13,488. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 12,11,017. கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,40,26,790.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் 88,905 பேருக்கு கொரோனா உறுதியானது. அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 95,67,543.
அமெரிக்காவுக்கு அடுத்ததாக பிரான்ஸில் ஒரே நாளில் 52,518 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. பிரான்ஸில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,66,433. 3-வதாக இந்தியாவில் திங்கள்கிழமையன்று 37,592 பேருக்கு கொரோனா உறுதியானது.
இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 82,66,914. அமெரிக்காவில் ஒரே நாளில் 522 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். அமெரிக்காவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 2,36,997.
இந்தியாவில் திங்கள்கிழமையன்று கொரோனாவால் 497 பேர் மரணம் அடைந்தனர். இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,23,139. பிரான்ஸிலும் ஒரே நாளில் 416 பேர் கொரோனாவால் மரணித்துள்ளனர். பிரான்ஸில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 37,435.