மிரட்டிய பழங்குடியினர்.. தோண்டி எடுக்கப்பட்ட கொரோனா சடலம்…

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடாரில் உள்ள அமேசான் காடுகளில், பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் குமே என்ற பகுதியில் வசித்து வரும் அமேசான் பழங்குடியின மக்களின் தலைவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார்.
இதையடுத்து உயிரிழந்த தலைவரின் உடலை தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என அப்பகுதியில் வசித்து வந்த அமேசான் பழங்குடியினர் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த நபரை, குடும்பத்தினரிடம் அளிக்காமல், அவர்களே அடக்கம் செய்தனர். இதனால் கோபமடைந்த அப்பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள் ஈக்வடார் நாட்டை சேர்ந்த 2 ராணுவ வீரர்கள், 2போலீசார் மற்றும் பொதுமக்கள் என 6 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
பேச்சுவார்த்தையில் தங்கள் தலைவரின் உடலை தந்தால் மட்டுமே பிணைக்கைதிகளை விடுதலை செய்வோம் என பழங்குடியின மக்கள் தெரிவித்துவிட்டனர். இதனால் வேறு வழியின்றி கொரோனாவால் உயிரிழந்து புதைக்கப்பட்ட பழங்குடியின தலைவரின் உடலை தோண்டி எடுத்து அம்மக்களிடம் ஒப்படைத்தனர்.
தங்கள் தலைவரின் உடலை பெற்றுக்கொண்ட பழங்குடியின மக்கள் பிடித்து வைத்திருந்த ராணுவ வீரர்கள் உள்பட ஆறு பிணைக்கைதிகளை விடுதலை செய்தனர்.