மக்களின் நலனை மறந்து அவரவர் பாக்கெட்டுகளை நிரப்புவதில் மட்டுமே கவனம் செலுத்தும் பிரபலங்கள்! மதுரை நீதிமன்றம் விமர்சனம்!!

ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்ததற்காக, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி, நடிகை தமன்னா ஆகியோருக்கு மதுரை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சமீபத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்துக்கொண்ட நிகழ்வுகள் அரங்கேறின. இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது. இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த முகமது ரஸ்வி தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, “விளம்பரம் செய்யும் பிரபலமானவர்களில் பலர் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் அவரவர் பாக்கெட்டுகனை நிரப்புவதில் கவனம் செலுத்துகின்றனர். பொதுமக்களில் பலர் அவர்களை பின்பற்றுவார்கள் என்று அறிந்தும் இவ்வாறு செயல்படுவது ஏன்?” என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து இந்த வழக்கில், மத்திய மாநில அரசுகள், கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, கங்குலி, நடிகை தமன்னா, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சுதீப், ரானா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தவிட்டு வழக்கை இந்த மாதம் 19-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். அத்துடன், மத்திய மாநில அரசுகளும் இதற்கு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x