அமெரிக்க தேர்தல் வரலாற்றில் செனட் சபை உறுப்பினராக முதல்முறையாக வெற்றி பெற்ற திருநங்கை!!!
அமெரிக்க தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக செனட் சபை உறுப்பினராக சாரா மெக்பிரைட் என்ற திருநங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
உலகமே எதிர்பார்த்த அமெரிக்கா அதிபர் தேர்தல் கொரோனா வைரஸ் பாதிப்புக்களுக்கும் மத்தியிலும் நேற்று அமைதியாக நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் அதிபராகப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு உலக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அதற்கு ஏற்றார்போல் அதிபர் ட்ரம்பும் எதிர்கட்சி வேட்பாளர் ஜோபைடனும் நெருக்கமான வாக்கு வித்தியாசத்தில் இருந்து வருகின்றனர். கடந்த தேர்தலைப் போல் அல்லாமல் இருகட்சிகளும் இந்த தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவதில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டுள்ளன.
இந்நிலையில் டெல் அவேர் பகுதியில் ஜனநாயகக்கட்சி சார்பில் போட்டியிட்ட திருநங்கை ஒருவர் தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக செனட் சபை உறுப்பினராகியுள்ளார். வழக்கறிஞரான 31 வயதாகும் திருநங்கை சாரா மெக் பிரைட் ஒரின சேர்க்கையாளர் விவகாரத்தில் ஆதரவாக செயலாற்றியுள்ளார். இந்த தேர்தல் வெற்றி குறித்து தெரிவித்துள்ள சாரா மெக் பிரைட், “நாம் செய்து முடித்து விட்டோம். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டோம். வாக்களித்தவர்கள் அனைவருக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.