காற்றில் பரவும் கொரோனா வைரஸ்- ஆய்வாளர்கள் தகவல்

‘கொரோனா வைரஸ் காற்று வழியாக பரவி மற்றவர்களுக்கு பாதிப்பை விளைவிக்கக் கூடும்’ என 200க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் கூறி உள்ளனர். கொரோனா வைரஸ் காற்றில் மிதக்கும் என அறிவிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பிடம் வலியுறுத்தி உள்ளனர்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் தொடும் பொருட்களை மற்றொருவர் தொட்டு விட்டு முகத்தை தொடும்போதும் கொரோனா பரவும் என உலக சுகாதார அமைப்பு கூறி வருகிறது. இதனால், மக்களின் நடமாட்டத்தை முடக்க தீர்மானித்து ஊரடங்கு போடப்பட்டுள்ளது. ஆனால், ஊடரங்கு போட்டாலும் பயனில்லை, கொரோனா காற்றில் பரவும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, 32 நாடுகளைச் சேர்ந்த 239 ஆய்வாளர்கள் உலக சுகாதார அமைப்பிற்கு திறந்த மடல் எழுதி உள்ளனர். அதில் ஆய்வாளர்கள் கூறியிருப்பதாவது:
“கொரோனா வைரஸ் காற்றில் மிதக்கும் தன்மை உடையது. வைரஸ் பாதித்த ஒருவர் தும்மினாலோ, இருமினாலோ அவரின் எச்சலின் சிறிய நுண்துகள்கள் காற்றில் பரவி இருந்தால், அதை மற்றொருவர் சுவாசிக்கும் போது, வைரசால் பாதிக்கப்படுவார்.
கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவும் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன.அடுத்த வாரம் இதுதொடர்பான ஆதார ஆய்வை வெளியிட உள்ளோம். உலக சுகாதார அமைப்பு இதை அறிவிக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால், இதுகுறித்து எந்தவிதமான கருத்தையும் உலக சுகாதார அமைப்பு இதுவரை வெளியிடவில்லை. தொடுதல் மூலம் பரவும் என்று நம்பப்படுவதால்தான், ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. காற்றில் பரவும் என்றிருந்தால், அதை தடுப்பது மிகவும் சிரமம் ஆகும்.