பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டு தேர்வின்றி தேர்ச்சி…மேற்கு வங்க மாநிலம் அறிவிப்பு!!!

மேற்கு வங்க மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதித் தேர்வுகள் இல்லை என்றும், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் எனவும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. அதன்பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் பள்ளிகள் திறப்பு குறித்து மாநில அரசு முடிவு செய்துகொள்ள மத்திய அரசு உத்தரவிட்டது.
இதனிடையே கடந்த வாரம் ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்ட 3 நாட்களில் 150 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இந்தியா முழுவதும் பள்ளிகள் திறக்க பெரும் அச்சம் நிலவி வருவதால் , நாடு முழுவதும் பள்ளிகள் முழுமையாக திறக்கப்படாத சூழ்நிலை நிலவுகிறது .

இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் 10 மற்றும் 12 படிக்கும் மாணவர்களுக்கு இறுதி தேர்வு கிடையாது என்று அம்மாநில முதல் – மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார் .
இது தொடர்பாக அவர் கூறுகையில் , மேற்கு வங்காளத்தில் நடப்பாண்டு (2020-2021) 10 மற்றும் 12 படிக்கும் மாணவர்களுக்கு இறுதி தேர்வு கிடையாது . பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளார் .