பீகாரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு!!

பீகாரில் ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் கட்ட தேர்தலும், கடந்த 3ஆம் தேதி இரண்டாவது கட்ட தேர்தலும் முடிவடைந்தன.
இந்நிலையில், இன்று (நவ.7) மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வடக்கு பீகாரில் 19 மாவட்டங்களில் அடங்கி உள்ள 78 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.
இறுதிக்கட்ட தேர்தலை சந்திக்கும் தொகுதிகள் வடக்கு பீகாரில் உள்ளன. சீமாஞ்சல் என அழைக்கப்படும் அப்பகுதியில் முஸ்லிம்கள் கணிசமாக வசிக்கிறார்கள். இத்தொகுதிகளில் 2 கோடியே 35 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதியானவர்கள் ஆவர். 1,200-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இத்தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜ.க. கூட்டணிக்கு லாலு பிரசாத் யாதவ் மகன்கள் பெரும் சவால்களாக உள்ளனர். தேஜஸ்வி யாதவின் தேர்தல் பிரசார கூட்டங்களில் மக்கள் திரளாக பங்கேற்றதால் வெற்றி வாய்ப்பு அவர்களுக்கு போய்விடுமோ என்ற கலக்கத்தில் ஐக்கிய ஜனதா தள கூட்டணி கலக்கத்தில் உள்ளது.