அதிபர் தேர்தலில் வெற்றிக்கு மிக அருகில் பைடன்.! வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற மறுக்கும் டிரம்ப்!!!
![](https://thambattam.com/storage/2020/11/Joe-Biden-780x470-1.jpg)
அமெரிக்காவில் 2020 அதிபர் தேர்தல் முடிவுறும் நிலையில் உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக அமெரிக்காவில் தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்து அரசியல் களம் பரபரப்பாக காணப்பட்டது. மொத்தம் உள்ள, 538 எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களில், 270 உறுப்பினர்களின் ஆதரவு அவசியம்.
நேற்று முன்தினம் நிலவரப்படி, ஜோ பிடனுக்கு, 253 உறுப்பினர்களின் ஆதரவும், டொனால்டு டிரம்புக்கு, 213 பேரின் ஆதரவும் கிடைத்தது. விரைவில், தேவையான 270ம் பிடனுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜனவரி மாதம் ஜோ பிடன், அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. டொனால்ட் டிரம்ப் நூலிழையில் அதிபர் வாய்ப்பை தவற விட்டுள்ளார். இதனால் குடியரசு கட்சி கடும் அதிருப்தியில் உள்ள நிலையில் ஜனநாயகக் கட்சி தொண்டர்கள் குதூகலத்தில் உள்ளனர். தற்போது அவர்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.
வெற்றி உறுதி செய்யப்பட்டாலும் இறுதி அறிவிப்பு வரும் வரையில் தொண்டர்கள் அமைதிகாக்க வேண்டும் என ஜோ பிடன் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணிநேரத்துக்கு முன்னர் அமெரிக்காவின் தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் மாகாணங்களான பென்சில்வேனியா மற்றும் ஜார்ஜியாவில் ஜனநாயகக் கட்சி பின்னடைவில் இருந்து வந்தது. தற்போது வாக்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார் பிடன்.அரிசோனா, நிவாடா உள்ளிட்ட மாகாணங்களிலும் நாம் தான் வெல்லப் போகிறோம் என ஜோ பிடன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஜோ தனது சொந்த ஊரான வெலிங்டனில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். முதல் வேலையாக கொரோனா வைரசை அமெரிக்காவில் இருந்து விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதால் தான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறப்போவதில்லை எனத்தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கை வெளியிட்ட ஜோ பிடன், டிரம்ப் தனது தோல்வியை ஏற்றுக்கொண்டு வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறவில்லை என்றால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார் என எச்சரித்துள்ளார்.