அமெரிக்காவின் “செகண்ட் ஜென்டில்மேன்” என்ற அந்தஸ்தை பெற உள்ள கமலா ஹாரிசின் கணவர்!!
![](https://thambattam.com/storage/2020/11/gallerye_060116928_2648759.jpg)
அமெரிக்காவில் துணை அதிபராக பொறுப்பேற்க இருக்கும் கமலா ஹாரிசின் கணவர், டக்லஸ் எம்ஹோப், நாட்டின், ‘செகண்ட் ஜென்டில்மேன்’ என்ற அந்தஸ்தை பெற உள்ளார்.
அமெரிக்காவில், ஜனநாயக கட்சியின் முன்னாள் துணை அதிபரான ஜோ பிடன், அதிபராகவும், இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ், துணை அதிபராகவும் பதவி ஏற்க உள்ளனர். பொதுவாக, அமெரிக்க அதிபரின் மனைவி, நாட்டின் முதல் பெண்மணி என்றும், துணை அதிபரின் மனைவி, அமெரிக்காவின் இரண்டாம் பெண்மணி என்று அழைக்கப்படுவர்.
அதன்படி, தற்போதுள்ள அதிபர் டொனால்டு டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப், அமெரிக்க முதல் பெண்மணி என்றும், துணை அதிபர் மைக் பென்சின் மனைவி காரன் பென்ஸ், இரண்டாம் பெண்மணி என அழைக்கப்படுகின்றனர். அதன்படி, அதிபராக பொறுப்பேற்கவுள்ள ஜோ பிடனின் மனைவி ஜில் பிடன், நாட்டின் முதல் பெண்மணி என்ற அந்தஸ்தை பெறவுள்ளார்.
ஆனால், இம்முறை துணை அதிபராக பதவியேற்கும் கமலா ஹாரிஸ், ஒரு பெண் என்பதால், அவரது கணவரான டக்லஸ் எம்ஹோப், அமெரிக்காவின் இரண்டாம் ஆண் எனப்படும், ‘செகண்ட் ஜென்டில்மேல்’ என்ற அந்தஸ்தை பெற உள்ளார்.