“மக்களை வெளியேற்றினால் விளைவுகள் மோசமாக இருக்கும்” – மெகபூபா எச்சரிக்கை

ஜம்மு-காஷ்மீர் அரசு ஆக்கிரமிப்பு என்ற பெயரில் வனப்பகுதியில் வசிக்கும் குஜ்ஜார் பகர்வால் இன மக்களை வெளியேற்றினால் விளைவுகள் மோசமாக இருக்கும்” என மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி எச்சரித்துள்ளார்.

காஷ்மீரில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வசித்து வருவோரை அதிகாரிகள் வெளியேற்றிவருகின்றனர். இந்நிலையில் காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் பகல்காமில் ஆக்கிரமிப்பை அகற்றியதால் பாதிக்கப்பட்டோரை மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தி நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப் பிரிவு நீக்கப்பட்ட பின் மத்திய அரசு பல தலைமுறைகளாக வனப் பகுதியில் வசித்து வரும் குஜ்ஜார் பகர்வால் இனத்தவரை சட்ட விரோதமாக வெளியேற்றி வருகிறது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x