‘ஒழுங்குபடுத்தப்படாத நிறுவன சலுகைகளை நம்பி, ஏமாற வேண்டாம்’; ரிசர்வ் வங்கி எச்சரிக்கை..

ஒழுங்குபடுத்தப்படாத நிறுவன சலுகைகளை நம்பி, ஏமாற வேண்டாம்’ என, இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, இந்திய ரிசர்வ் வங்கி தரப்பில் கூறப் படுவதாவது:எந்தவொரு திட்டத்திலும், பணத்தை செலுத்தும் முன், திட்டத்தை முழுமையாக சரிபார்க்க வேண்டும். விரைவான மற்றும் அதிக வருவாயை உறுதியளிக்கும் வகையில், ஒழுங்குபடுத்தப்படாத நிறுவன சலுகைகளை நம்பவேண்டாம்.
அதை நம்பி பணம் செலுத்தினால், மோசடி நடைபெற வாய்ப்பிருக்கிறது. எனவே, மோசடி திட்டங்களில் பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம். இவ்வாறு, வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.