கடும் போட்டிகளுக்கிடையே எண்ணப்பட்டு வரும் பீகார் சட்டபேரவை தேர்தல் வாக்குகள்!!

பீகாா் சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை தொடங்கி எண்ணப்பட்டு வருகின்றன.
பீகாரில் தற்போது கிடைத்திருக்கும் முன்னிலை நிலவரங்களின் அடிப்படையில், பாஜக – ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) – காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னிலை நிலவரங்களின் அடிப்படையில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், இழுபறி நிலவி வருகிறது.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் 55 மையங்களில் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.
ஆர்ஜேடி – காங்கிரஸ் கூட்டணி 120 இடங்களில் முன்னிலையில் உள்ளன. பாஜக – ஜேடியு கூட்டணி 112 இடங்களில் முன்னிலையில் உள்ளன. தனித்துப் போட்டியிட்ட பாஸ்வானின் லோக் ஜன சக்தி 10 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
இதில், ஆர்ஜேடி 59 தொகுதிகளிலும், பாஜக 48 தொகுதிகளிலும், ஜேடியு 22 தொகுதிகளிலும், காங்கிரஸ் 20 தொகுதிகளிலும் முன்னிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.