நான் தமிழ் பேசும் ‘இந்தியன்’, ‘இந்தி தெரியாது போடா’.. ஒரு சிறிய தீப்பொறி காட்டுத் தீயாகி இருக்கிறது!!

ஒரு சிறிய தீப்பொறி காட்டுத் தீயாகி இருக்கிறது, இந்தத் தலைமுறையும் மொழி உணர்வில் சளைத்ததல்ல என்று கனிமொழி ட்வீட் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “ஒரு சிறிய தீப்பொறி காட்டுத் தீயாகி இருக்கிறது. இந்தித் திணிப்பு என்பதை எதிர்க்கும் சட்டைகளை வெளியிட்டபோது யாரும் எதிர்பாராத அளவு இது இளைஞர்களிடம் வரவேற்பு பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் தலைமுறையும் மொழி உணர்வில் சளைத்ததல்ல” என்று கூறியுள்ளார்.

நேற்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் நடிகர் சிரீஷ் ஆகியோர் ’நான் தமிழ் பேசும் இந்தியன்’, ’இந்தி தெரியாது போடா’ என்ற வாசகங்கள் அடங்கிய டிசர்ட்டுகளை அணிந்து டிவிட்டரில் புகைப்படம் வெளியிட்டனர். அதன்பிறகு இந்த படங்கள் வெகுவேகமாக பகிரப்பட்டு வைரலானது. இப்போது பல பிரபலங்களும் அதேபோன்ற டிசர்ட்டுகளை அணிந்தபடி புகைப்படம் வெளியிட்டுவருகின்றனர்.

இன்று டிவிட்டரில் “இந்தி தெரியாது போடா” என்ற ஹேஷ்டேக் டிரண்டிங்கில் இடம்பெற்றுவருகிறது. இந்த சூழலில் கனிமொழி இந்த டிவீட்டை வெளியிட்டுள்ளார்.

ஒரு சிறிய தீப்பொறி காட்டுத் தீயாகி இருக்கிறது. இந்தித் திணிப்பு என்பதை எதிர்க்கும் சட்டைகளை வெளியிட்டபோது யாரும் எதிர்பாராத அளவு இது இளைஞர்களிடம் வரவேற்பு பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் தலைமுறையும் மொழி உணர்வில் சளைத்ததல்ல.#ஹிந்தி_தெரியாது_போடா#StopHindiImposition

— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) September 6, 2020

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x