“பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொரோனா வைரஸ் போன்றவர்..” – மரியம் நவாஸ்

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் துணை தலைவராக இருந்து வருகிறார். 

அவர் கில்ஜித்-பலுதிஸ்தானில் வருகிற ஞாயிறன்று நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு 7 நாள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக கில்ஜித்-பலுதிஸ்தான் நகரில் குப்பிஸ் என்ற பகுதியில் நடந்த பொது கூட்டமொன்றில் கலந்து கொண்டு மக்களிடையே பேசினார். 

அவர் பேசும்பொழுது, கொரோனா வைரஸ் என்ற தொற்று சமீபத்தில் உலகிற்கு வந்துள்ளது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டிலேயே பாகிஸ்தானில் அது பரவி விட்டது. இந்த தொற்றுநோய் முக கவசங்களை அணிந்து கொண்டால் போய் விடாது. அதனை நீங்கள் தூக்கி எறிய வேண்டும் என கூறினார்.  தொடர்ந்து, இம்ரான் போன்ற நபர்களின் பெயர்களை பற்றி பேசுவதே வலி ஏற்படுத்துகிறது என கூறிய மரியம் நவாஸ், கான் மற்றும் அவரது கட்சி பாகிஸ்தானில் இன்றைய தினம் நோயை பரப்பி கொண்டிருக்கிறது. 

பிரதமர் அலுவலகத்தில் இருக்க கான் தகுதியற்றவர். உங்கள் பிரச்னைகளுக்கு ஒரே தீர்வு ஒன்று உள்ளது. அதன் பெயர் நவாஸ் ஷெரீப் என்று கூறி தங்களது கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி அவர் மக்களிடம் கேட்டு கொண்டார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x