இடி வடிவில் வந்த எமதர்மன்; பீகாரில் தொடரும் சோகம்

பீகார், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்த நிலையில் மின்னல் தாக்கி 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மின்னல் தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிதிஷ் குமார் தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். பீகாரில் இடி, மின்னல் தாக்கி இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை பீகாரில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புண்டு என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.