ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 432 பேர் கரோனாவால் உயிரிழப்பு!!
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,851 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷியாவில் கடந்த மாதம் கரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நாள் ஒன்றுக்கு 18,000 என்ற அளவில் தொற்று பாதிப்பு இருந்து வருகிறது. அதேபோன்று கரோனாவுக்கு பலியாவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், அந்நாட்டு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,851 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 18,36,960 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று கடந்த 24 மணி நேரத்தில் 432 பேர் உள்பட இதுவரை 31,953 பேர் உயிரிழந்துள்ளனர்.அதேநேரத்தில் தற்போதுவரை 13,69,357 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். மேலும், இன்றைய நிலவரப்படி 4,36,010 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெறுவோரில் 2,300 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 4,477 பேர் உள்பட இதுவரை 4,85,545 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.