“இந்தியாவில் மோடியால் தான் ஜனநாயகம் சரிகிறது.. ” – ஸ்டீஃபன் லிண்ட்பெர்க்

சுவீடனில் வசிக்கும் வி-டெம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் இயக்குனர் ஸ்டீஃபன் லிண்ட்பெர்க் இந்தியாவின் ஜனநாயகம் பற்றி கூறும்பொழுது:-

“இந்தியாவில் ஜனநாயகம் சரிந்துகொண்டிருக்கிறது. விரைந்து அதைச் சரி செய்யாவிட்டால் இந்தியா தன் ஜனநாயகத் தன்மையை இழந்துவிடும். இந்தச் சரிவு அனைத்துமே தற்போதைய ஆளும் பி.ஜே.பி அரசாளும், பிரதமர் மோடியின் செயல்களாலும் ஏற்பட்டவைதான். இந்தியாவின் ஊடக சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், மாறுபட்ட கருத்துக்களின் சுதந்திரம், மக்கள் சமூகத்தின் சுதந்திரம், நடைபெறும் தேர்தல்களின் தரம், சுதந்திரமான கல்வி போன்ற பல காரணிகளில் இந்தியா சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

முக்கியமாகக் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் ஊடக சுதந்திரம் பறிபோய் வருகிறது. பத்திரிகையாளர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். கைது செய்யப்படுகிறார்கள், அரசாங்கம் ஊடகங்களை அடிபணிய வைக்க முயல்கிறது. அரசை விமர்சிக்கும் சமூக ஆர்வலர்கள் குறிவைக்கப்படுகிறார்கள்.

தற்போது ஆட்சியைக் கவிழ்த்தோ, ராணுவ ஆட்சியைக் கொண்டுவந்தோ அவசரநிலையைக் கொண்டுவரத் தேவை இல்லை. மாறாக, அரசியலமைப்பிலும், சட்டத்திலும் மாற்றம் கொண்டுவந்து சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தியே அவர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள். உதாரணமாக, துருக்கியின் அதிபர் எர்துவான் நாடாளுமன்றத்தைப் பயன்படுத்தி சட்டத்தில் மாற்றம் கொண்டுவந்தார். துருக்கி மற்றும் போலந்தில் நடந்த அதே செயல்கள்தாம், தற்போது இந்தியாவில் நடந்து வருகின்றன.

இந்தியாவில் இந்தநிலை நீடித்தால், விளைவுகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மோசமாக இருக்கும். இந்த அரசு செய்த தவறான செயல்களை விரைந்து சரிசெய்து ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டினால் மட்டுமே இந்த நிலை மாறும். ஜனநாயக நாடாக நீடிக்கும். இந்தியா தற்போது இருக்கும் நிலையிலிருந்த நாடுகளில் 80 சதவிகித நாடுகள் சர்வாதிகார நாடக மாறியுள்ளதை நாம் கவனிக்க வேண்டியுள்ளது” என்றார் அவர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x