எதிரியை ஜேசிபி இயந்திரத்தால் வாரி அள்ளிய கோபக்கார ஓட்டுனர்…

தெலுங்கானாவில் ஜேசிபி வாகன ஓட்டி ஒருவர், தன்னை கெட்டவார்த்தையால் திட்டியவரை, ஜேசிபியால் சுழற்றி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தெலுங்கானா மாநிலம் கமலாபுரம் கிராமத்தில் மரத்தடியில் அமர்ந்திருந்த ஒரு நபர் ஒருவர், அங்கு பணிக்காக வந்த ஜேசிபி வாகன ஓட்டுநரை ஏதோ சொல்லி திட்டுகிறார். சகட்டுமேனிக்கு திட்டியதால் ஆத்திரமடைந்த ஜேசிபி வாகன ஓட்டுநர், ஜேசிபி முன்பகுதியை வேகமாக கொண்டு சென்று, திட்டிய நபரை சுழற்றி இழுத்து கீழே தள்ளிவிட்டுள்ளார்.
இதனால் அந்த நபர் கீழே விழுந்து எழ முடியாமல் தடுமாறினார். பிறகு இருவர் வந்து அவரை தூக்கியுள்ளனர் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.