பெரிய மீன் சிக்கியும் விலையில்லை… மீனவர்கள் கவலை

ராமேஸ்வரத்தில், மீன்கள் விலை வீழ்ச்சியடைந்ததால், மீனவர்கள் கவலையில் உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் இருந்து, மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள், நேற்று கரை திரும்பினர். ஆனால், மீன்கள் விலையில், 10 முதல், 20 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. ‘ஊரடங்கு கெடுபிடியால், மீன்களை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல முடியாததால், விலை தர முடியவில்லை’ என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
வலையில், சிவப்பு நிறத்தில் அரிய வகை, பல் உலுங்கை என்ற மீன்சிக்கியது. இம்மீன், கிலோ, 200 ரூபாய்க்கு விற்பனையானது.