பக்ரீத் பண்டிகையால் செம்மறி ஆடுகளுக்கு செம கிராக்கி

ஆகஸ்ட் முதல் வாரத்தில், பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், செம்மறி ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டு உள்ளது.
சென்னை உட்பட அனைத்து நகர வியாபாரிகள், கறிக்கடை உரிமையாளர்கள், கிராமங்களுக்கே சென்று, ஆடுகளை கொள்முதல் செய்கின்றனர். செம்மறி ஆடுகளை விட, வெள்ளாடுகள் விலை உயர்ந்திருப்பது வழக்கம். ஆக., 1ல், பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், குர்பானி எனப்படும் தானம் கொடுக்க, முஸ்லிம் மக்கள், செம்மறி ஆடுகளை கொள்முதல் செய்ய துவங்கி உள்ளனர். அதற்கேற்ப, வியாபாரிகள், கறிக்கடை உரிமையாளர்கள், வெள்ளாடுகளை நிறுத்திவிட்டு, செம்மறி ஆடுகளை கொள்முதல் செய்கின்றனர்.
இதனால், அதன் விலை, 500 முதல், 1,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.கடந்த வாரம் வரை, 10 கிலோ செம்மறி ஆடு, 5,100 முதல், 6,000 ரூபாய் வரை விற்ற நிலையில், தற்போது, 6,000 முதல், 7,500 ரூபாய் வரை விற்கிறது. இதனால், செம்மறி ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டு உள்ளது. வெள்ளாடுகளின் விலையில், எந்த மாற்றமுமின்றி, 10 கிலோ, 6,500 முதல், 7,000 ரூபாய் வரை விற்பனையாகிறது.