கேரள தங்க கடத்தல் வழக்கில் கைதான சிவசங்கருக்கு 26 வரை சிறை;- சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!!

கேரள தங்க கடத்தல் வழக்கில் கைதாகி உள்ள, முன்னாள் முதன்மை செயலர் சிவசங்கரை, வரும், 26 வரை சிறையில் அடைக்க, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கேரளாவை கலக்கிய தங்க கடத்தல் வழக்கில், அம்மாநில முதல்வரின், முன்னாள் முதன்மை செயலர் சிவசங்கரை, அமலாக்கத்துறையினர், கடந்த மாதம் கைது செய்தனர். அவரை, 14 நாட்கள், அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க, சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது. விசாரணைக்கு அனுமதிக்கப்பட்ட காலம் முடிவடைந்ததை அடுத்து, கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், சிவசங்கர் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.
ஜாமின் கோரி, அவர் தாக்கல் செய்த மனுவுக்கு, அமலாக்கத்துறை சார்பில், கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜாமின் மனு மீதான விசாரணையை, வரும், 17க்கு ஒத்தி வைத்தார். பின், சிவசங்கருக்கு வரும், 26 வரை நீதிமன்ற காவல் வழங்கி, நீதிபதி உத்தரவிட்டார்.