“இலக்கியங்கள் மீதான குறுகிய மனப்பான்மை சமூக வளர்ச்சியை தான் தடுக்கும்!” அருந்ததி ராய் பேட்டி!!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டிருந்த அருந்ததி ராய் புத்தகம் ஏபிவிபி போராட்டத்தை தொடர்ந்து நீக்கப்பட்டுள்ளது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் பி.ஏ ஆங்கிலம் பட்டப்படிப்பில் இந்தியாவின் மூத்த பெண் பத்திரிக்கையாளர் அருந்ததிராய் எழுதிய ‘Walking with the Comrades’ என்ற புத்தகம் பாடமாக உள்ளது. மார்க்ஸிஸ்ட், நக்சலைட்டுகளுடன் பயணம் மேற்கொண்டது பற்றி அருந்ததிராய் எழுதிய இந்த புத்தகம் கடந்த 4 வருடமாக பாடத்திட்டத்தில் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த புத்தகத்தில் மாவோயிஸ்ட்கள் குறித்த சர்ச்சையான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக ஏபிவிபி மாணவர் அமைப்பு பாடத்திட்டத்திலிருந்து புத்தகத்தை நீக்க வேண்டும் என போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் மாணவர்களின் எதிர்ப்பை சந்தித்ததால் அந்த புத்தகம் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்படுவதாக துணை வேந்தர் பிச்சுமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எழுந்த சர்ச்சையை அடுத்து எழுத்தாளர் அருந்ததி ராய் அளித்த பேட்டியில், “இந்த விஷயம் வருத்தத்தை விட மகிழ்ச்சியையே அளிக்கிறது. எனது கடமை எழுதுவது மட்டுமே. வாசகர்களே அதனை உரிய இடத்தில் வைக்கவேண்டும். இலக்கியங்கள் மீதான குறுகிய மனப்பான்மை சமூக வளர்ச்சியை தடுக்கும். இதுபோன்ற தடைகளால் ஒருபோதும் எழுதுவதை தடுக்க முடியாது” என அருந்ததி ராய் தெரிவித்துள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x