“அதே டெஸ்ட், அதே நர்ஸ் தான் ஆனா ரிசல்ட் வேற…?” கொரோனா பரிசோதனை குறித்து சந்தேகிக்கும் எலன் மஸ்க்..!
ஒரே நாளில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் வெவ்வேறான முடிவுகள் வந்ததை தொடர்ந்து கொரோனா பரிசோதனையின் நன்பகத்தன்மை குறித்து டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க் கேள்வி எழுப்பியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கு வைரஸ் பாதிப்பை தடுக்க கொரோனா பரிசோதனைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதோடு தடுப்பு மருத்து பரிசோதனைகளையும் உலக நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன. இருப்பினும் கொரோனாவை உறுதிசெய்ய பயன்படுத்தப்படும் பரிசோதனை கருவிகள் மீதான நம்பகத்தன்மை தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. பல நாடுகளில் வைரஸ் பரிசோதனையில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
Something extremely bogus is going on. Was tested for covid four times today. Two tests came back negative, two came back positive. Same machine, same test, same nurse. Rapid antigen test from BD.
— Elon Musk (@elonmusk) November 13, 2020
இந்நிலையில் ஒரே நாளில் மேற்கொண்ட 4 கொரோனா பரிசோதனையில் குழப்பமான முடிவுகள் வெளிவந்துள்ளதாக பிரபல டெஸ்லா நிறுவனத்தில் தலைவர் எலம் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இது மிகவும் போலியாக உள்ளது. இன்று நான்கு முறை கொரோனா பரிசோதனை செய்தேன். இரண்டு சோதனைகள் பாஸிடிவ் என்று வந்தன. இரண்டு பரிசோதனைகள் நெகடிவ் என வந்தன. அதே ஆன்டிஜென் சோதனை இயந்திரம், அதே சோதனை, அதே செவிலியர்” என பதிவிட்டுள்ளார்.
இதனிடையே கொரோனா அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என ரசிகர்கள் அளித்த கேள்விக்கு பதிலளித்த அவர், சளி மட்டுமே உள்ளதாகவும் மற்றபடி எந்த அறிகுறிகளும் இல்லை என பதிவிட்டுள்ளார். மேலும் தற்போது பிசிஆர் பரிசோதனை செய்து முடிவுக்காக காத்திருப்பதாக தெரிவித்தார்.
உலக பிரபல டெஸ்லா நிறுவனத்தில் தலைவர் எலம் மஸ்க், கொரோனா பரிசோதனைகள் மீது சந்தேக பார்வையை வீசியுள்ளது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.