ஆரணியில் பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்த்த சிறுவன் பரிதாபமாக பலி!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சதுப்பேரி கிராமத்தில் சுப்பிரமணி என்ற நெசவு தொழிலாளி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 7 வயதில் சபரிவாசன் என்ற மகன் உள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்றிரவு சுப்பிரமணி வீட்டின் அருகே அப்பகுதி சிறுவர்கள் வெடி வெடித்துள்ளனர். அப்போது வீட்டின் அருகே நின்றவாறு சுப்பிரமணியின் மகன் சபரிவாசன் பட்டாசு வெடிப்பதை வேடிக்கை பார்த்துகொண்டிருந்தான்.
அப்போது திடீரென எதிர்பாராத விதமாக பட்டாசுகள் வெடித்து சிதறியதில் சபரிவாசக் மீதும் பட்டாசு விழுந்து பட்டாசு வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் சிறுவனுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக சிறுவனை மீட்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆரணி அரசு மருத்துமனைக்கு கொண்டுச்சென்று அனுமதித்தனர். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் சபரிவாசன் உயிரிழந்தார்.
பட்டாசு வெடித்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து ஆரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.