ஜனவரி 20 க்குப் பிறகு அதிபராக இருக்க மாட்டார் என்பதை சூசமாக தெரிவித்த டிரம்ப்!!
![](https://thambattam.com/storage/2020/11/IMG_20201114_234059.jpg)
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று ரோஸ் கார்டனில் உரையாற்றும் போது ஜனவரி 20 க்குப் பிறகு அவர் அதிபராக இருக்க மாட்டார் என்பதை சூசமாக தெரிவித்து தனது தோல்வியை ஒப்புகொள்ள நெருங்கி உள்ளார். அவரது நிர்வாகம் புதிய கொரோனா வைரஸ் ஊரடங்குகளுக்கு உத்தரவிடாது என்றும் கூறினார்.
அவர் பேசும் போது இந்த நிர்வாகம் ஒரு கொரோனா ஊரடங்கை இனி அறிவிக்காது. எதிர்காலத்தில் என்ன நடந்தாலும் – அது எந்த நிர்வாகமாக இருக்கும் என்று யாருக்குத் தெரியும்? நேரம் தான் பதில் சொல்லும் என்று நினைக்கிறேன் – ஆனால் இந்த நிர்வாகம் இனி ஊரடங்கிற்கு உத்தரவிடப்போவதில்லை என்று நான் உங்களுக்குச் சொல்ல முடியும் என கூறினார். அடுத்த ஆண்டு வேறு நிர்வாகம் இருக்கக்கூடும் என்று டிரம்ப் கூறுவது, அவர் தற்போது தேர்தல் முடிவுகளை அங்கீகரிப்பதை காட்டுகிறது.
அவர் விரைவில் பதவியில் இருந்து விலகுவதாக பகிரங்கமாகக் கூறவில்லை என்றாலும், டிரம்ப் சூசகமாக கூறி உள்ளார். மேலும் அவர் கூறும் போது இந்த நிர்வாகம் எந்த சூழ்நிலையிலும் ஊரடங்கு வழியாக செல்லாது, ஆனால் நாம் மிகவும் விழிப்புடன் இருப்போம். மிகவும் கவனமாக இருங்கள்” என்று அவர் கூறினார்.