முட்டி தூக்கிய காட்டுமாடு… தட்டி கேட்ட பொதுமக்கள்…

தென்காசி மாவட்டம், புளியங்குடி, காயிதே மில்லத் நகரை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவர் தன் நிலத்தில் விவசாய வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காட்டு மாடு முட்டியதில், சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதையடுத்து, காட்டு மாடு, பன்றி உள்ளிட்ட விலங்குகள், விவசாய நிலங்களில் நுழைவதை தடுக்கக் கோரி, பொதுமக்கள், புளியங்குடி வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“மக்களின் உயிரைக் காக்க வேண்டிய வனத்துறை, எளிய மக்களிடமிருந்து தேனை திருடுவதில் தான் கவனம் செலுத்துகிறது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் எந்த அக்கறையும் இல்லை.

மனித உயிர்களை விட, இவர்களுக்கு மிருக பாதுகாப்புதான் முக்கியம் என்ற ரீதியில் செயல்படுகின்றனர். வெகுகாலம் இந்த நிலை நீடிக்காது.காட்டு மாடு தாக்கியதில் உயிரிழந்த சாகுல் ஹமீது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும், ” என்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x