அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும்!! வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த மாதம் இறுதி முதல் தொடங்கியுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த ஒருவாரமாக அவ்வப்போது இடைவெளிவிட்டு கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட 12 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், சென்னை, கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 5 மணி நேரத்துக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.