ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ) நாடுகளின் கோல்டன் விசா முறை நீட்டிப்பு..
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ) நாடுகளின் கோல்டன் விசா முறை அடுத்த சில ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளது.
வெளிநாட்டுத் திறமைகளை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே குறிப்பிட்ட பிரிவில் பட்டம் பெற்றவர்களையும், திறமையானவர்களையும் ஈர்க்கும் பொருட்டு 10 ஆண்டு ஐக்கிய அரபு நாடுகளில் தங்கி பணியாற்றும் ஒரு சிறப்புமிக்க விசா தான் இந்தக் கோல்டன் விசா. இந்த விசா முறையை அடுத்த சில ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஐக்கிய அரபு எமிரேட்சின் (யு.ஏ.இ) துணைத் தலைவரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், ஒப்புதல் அளித்துள்ளார்.
டுவிட்டரில் இது குறித்து வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: பி.எச்டி., பட்டம் பெற்றவர்கள், அனைத்து மருத்துவர்கள், கணினித் துறைகள், எலக்ட்ரானிக்ஸ், புரோகிராமிங், எலக்ட்ரிக்கல்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆக்டிவ் டெக்னாலஜி ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்ற அனைத்து பொறியியலாளர்களும் இந்த புதிய கோல்டன் விசாக்களைப் பெறலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.