டிரெண்டிங்தமிழகம்

ஹஜ் பயணம் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர்!!

“2021-ம் ஆண்டு ஹஜ் பயணத்திற்கு தமிழகத்தில் இருந்து செல்ல அனுமதிக்க வேண்டும்” என முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் ஹஜ் பயணமாக சவுதி அரேபியா செல்வர். இதற்கு வசதியாக சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து விமான சேவைகள் இயக்கப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக அடுத்த ஆண்டுக்கான ஹஜ் பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டது. புறப்படும் இடங்களின் எண்ணிக்கை 10 ஆக குறைக்கப்பட்டது. அதில் சென்னை இடம்பெறவில்லை.

இந்நிலையில் 2021-ம் ஆண்டு ஹஜ் பயணத்திற்கு தமிழகத்தில் இருந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் பயணம் மேற்கொள்பவர்கள் கொச்சியில் இருந்து செல்வது சற்று சவாலானது என்றும், முதியவர்கள் உள்ளிட்டோர் அதிகம் சிரமப்படுவார்கள் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x