“கொரோனா தொற்றை தடுக்க ஒரு தடுப்பூசி போதாது!” உலக சுகாதார அமைப்பின் தலைவர் அறிவுறுத்தல்!!
![](https://thambattam.com/storage/2020/08/tedros-adhanom-jpg_1200x900-780x470.jpg)
கொரோனா தொற்றை தடுக்க ஒரு தடுப்பூசி போதுமானதாக இருக்காது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் தலைவரான டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் திங்கட்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “கொரோனா வைரஸ் பரவிய சில மாதங்களுக்கு பிறகு, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 மில்லியனை கடந்துள்ளது. 1.3 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் இறந்துள்ளனர்.
ஒரு தடுப்பூசி நம்மிடம் உள்ள மற்ற கருவிகளை பூர்த்தி செய்யுமே ஒழிய அவை போதாது, ஒரு தடுப்பூசி கொரோனோ வைரஸ் தொற்று நோயை முடிவுக்கு கொண்டு வராது” என்று தெரிவித்துள்ளார்.
திங்களன்று உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரங்களின் படி , 660,905 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.