Unsung Hero: கடந்த 10 ஆண்டுகளாக ஏழைகளுக்கு இலவசமாக உணவு அளிக்கும் ஆஷிப் உசேன்!!

தெலங்கானாவைச் சேர்ந்த ஒருவர் உணவு இல்லாமல் தவித்து வரும் மக்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக இலவசமாக மதிய உணவை வழங்கி வருகிறார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஆசிப் உசேன். இவரின் மனைவி மற்றும் மகள் இறந்த நிலையில், அவர்களின் நினைவாக கடந்த 2010 ஆம் ஆண்டு சாகினா அறக்கட்டளையை நிறுவியுள்ளார். இந்த அறக்கட்டளை மூலம் கடந்த மூன்று மாதங்களாக ஜூபிலி மலைப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு, இலவசமாக மதிய உணவு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கிவருகிறார்.

இது குறித்து ஆசிவ் கூறும் போது. “உணவு இல்லாமல் தவிப்பவர்களுக்கு உணவு வழங்குவதற்காக நகரத்தின் பல்வேறு பகுதிகளில் சமையல்கூடங்கள் நிறுவப்பட்டுள்ளன. கொரோனா ஊரடங்கு காலங்களில் உணவு இல்லாமல் தவித்த வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு 200 தன்னார்வலர்களின் உதவியுடன் உணவை வழங்கினோம்.

இந்தச் சேவையை தெலங்கானா முழுவதும் செயல்படுத்தும் திட்டம் இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்தச் சேவையை நாங்கள் வழங்கிவருகிறோம். குப்பைத்தொட்டியில் கிடக்கும் உணவை சாப்பிடும் பல நபர்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நாங்கள் நடத்தி வருகிறோம்” என்றார்.

ஆசிவ் உசேனை அண்மையில் ஹைதராபாத்தின் மேற்கு மண்டல ஆணையர் ஏ.ஆர். ஸ்ரீனிவாஸ் அழைத்து பாராட்டி கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x