ஆற்றில் தவறி விழுந்த மாணவி.. மாணவியை காப்பாற்றிய 61 வயது சூப்பர் ஹீரோ!! யார் அவர்??
சீனாவின் சோங்கிங்கில் புதிதாக நியமிக்கப்பட்ட இங்கிலாந்து துணைத் தூதர் ஸ்டீபன் எலிசன்( வயது 61). கடந்த சனிக்கிழமை அருகில் உள்ள நகருக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது சுற்றுலா நகரமான ஜாங்ஷானில் உள்ள ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. அப்போது அங்கு வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த மாணவி தவறி விழுந்தார். அருகில் நின்று கொண்டு இருந்தவர்கள் அவரை காப்பாற்றும் படி அலறுகிறார்கள்.
இஆனால் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. ஆற்றில் விழுந்த மாணவி நீரோட்டத்திற்கு எதிராக போராடுகிறார். பின்னர் மயங்கி விடுகிறார். அதைப் பார்த்த தூதரக அதிகாரி எலிசன் துணிச்சலுடன் ஆற்றில் குதித்து நீச்சல் அடித்து சென்று அந்த மாணவியை காப்பாற்றி கரையேற்றுகிறார். இது குறித்த வீடியோ சீனாவின் சமூக வலைதளங்களில் பரவி ஸ்டீபன் எலிசன் சீனாவில் ஹீரோவாகி விட்டார்.
61 வயதான டிரயத்தலான் வீரரான எலிசன், ஏற்கனவே மயக்கத்தில் இருந்த அந்த பெண்ணை மீட்பதற்கு துணிச்சலாக குதித்ததாக சோங்கிங்கில் உள்ள பிரிட்டிஷ் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.