ஊரடங்கில் ஓடோடி உதவி செய்த சோனு சூட்டை கவுரவித்த இந்திய தேர்தல் ஆணையம்!!

நடிகர் சோனு சூட்டை பஞ்சாபின் மாநில அடையாள சின்னமாக நியமித்து இந்தியத் தேர்தல் ஆணையம் கவுரவித்துள்ளது.
பாலிவுட் நடிகர் சோனுசூட் கொரோனா காலத்தில் மக்கள் பலருக்கு உதவினார். தற்போதும் தொடர்ந்து உதவி வருகிறார். நாடு முழுதும் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்த ஊர் செல்ல வசதி செய்தி கொடுத்து, உணவு, தங்கும் வசதி ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். இன்னும் ஏராளமான பல உதவிகளைச் செய்துள்ளார்.
சமீபத்தில் ஐ.நா அமைப்பு சோனு சூட்டின் சமூக சேவையைப் பாராட்டி அவருக்கு சிறந்த மனிதநேய செயல்பாட்டாளர் விருதை வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது பஞ்சாப் தலைமை தேர்தல் அதிகாரி கருணா ராஜூ இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய பரிந்துரையில், சோனு சூட்டை பஞ்சாபின் மாநில அடையாள சின்னமாக நியமிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார். தேர்தல் ஆணையம் சார்பிலும் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது அவருக்கு கிடைத்த மற்றுமொரு அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
Thank you so much for your encouraging words sir. It’s been an honour that cannot be expressed in words. Humbled 🙏 https://t.co/9KfJjQhzw0
— sonu sood (@SonuSood) November 17, 2020
இந்நிலையில் நடிகர் சோனு சூட்டை பஞ்சாபின் அடையாளம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்புக்கு நடிகர் சோனு சூட் தனது சமூக வலைதள பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.