மின்னல் வேகத்தில் வரும் தனியார் பஸ்களால் உயிர்பயம்!! இருவர் சாலையில் அமர்ந்து மறித்ததால் பரபரப்பு..

விருதுநகர் வழி செல்லும் தனியார் பஸ்கள், அரசு பஸ்களை முந்தி சென்று பயணிகளை ஏற்றி, வருமானம் பார்க்க வேண்டுமென்ற நோக்கில் மின்னல் வேகத்தில் சென்று வருகின்றன. பஸ்களின் உள்ளே இருக்கும் பயணிகளையோ, சாலைகளில் செல்லும் மக்களையே கண்டு கொள்வதில்லை.

மின்னல் வேகத்தில் வரும் தனியார் பஸ்களை பார்த்து சாலைகளில் செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு உயிர்பயம் அதிகரித்துள்ளது. தனியார் பஸ்களால் விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், பஸ்களின் வேகத்தை கட்டுப்படுத்த வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மாதந்திர வசூலுக்காக கண்டு கொள்வதில்லை.

இந்நிலையில் நேற்று அதிவேகமாக விருதுநகர் வழி மதுரை சென்ற தனியார் பஸ், அரசு பஸ்சை முந்தி வேகமாக சென்ற போது, விருதுநகர் புது பஸ் நிலையம் கௌசிகா பாலத்தில் இருவர்(செல்வராஜ், மணிமாறன்) சாலையில் அமர்ந்து மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தனியார் பஸ் ஓட்டுநரை எச்சரித்து, சாலையில் அமர்ந்த இருவரை சமாதனம் செய்து அனுப்பி வைத்தனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x