“பணத்தை பதுக்கி வைக்கவே ஓபிஎஸ் மகன் மாலத்தீவிற்கு பயணம் ” – தங்கதமிழ்ச்செல்வன்

பல கோடி ரூபாயை பதுக்கி வைக்கவே மாலத்தீவுக்கு ஓபிஎஸ் மகன் சென்றுள்ளார் என திமுக தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் குற்றம் சாட்டினார்.

தேனி நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமை வகித்து பேசியதாவது:

எடப்பாடி முதல்வராவதற்கு, ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலகோடி ரூபாய் கைமாறி உள்ளதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை பதுக்கி வைக்கவே ஓபிஎஸ் மகன் தனி விமானத்தில் மாலத்தீவிற்கு சென்று இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

இங்கே கொரோனா நோய் தொற்றால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் பணத்தை பதுக்குவதற்காக ஓபிஎஸ் குடும்பத்தினர் தனி தீவிற்கு செல்கின்றனர். இந்த பணத்தை வைத்து எதிர்காலத்தில் வெற்றி பெறலாம் என்று கனவு காண்கின்றனர். ஓபிஎஸ் நினைப்பதுபோல அதிமுக வெற்றி பெற முடியாது என்றார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x