ரஷ்ய நாட்டுத் தமிழறிஞர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி மறைவு.. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!
ரஷ்ய நாட்டுத் தமிழறிஞர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவைத் சேர்ந்த பிரபல தமிழ் அறிஞர் அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி (79). இவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மாஸ்கோவிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தப்போதும் அவை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
ரஷ்ய நாட்டுத் தமிழறிஞர் – பேராசிரியர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி மறைவு பேரிழப்பு.
ரஷ்ய பல்கலைக்கழகங்களில் தமிழ் பயிற்றுவித்த துப்யான்ஸ்கி வாயிலாகத் தமிழ் அறிந்த மேல்நாட்டவர் ஏராளம்.
செம்மொழி மாநாட்டில் தொல்காப்பியம் குறித்த ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்தவர்!
ஆழ்ந்த இரங்கல்! pic.twitter.com/mi6NHXnFL6
— M.K.Stalin (@mkstalin) November 19, 2020
ரஷ்ய நாட்டுத் தமிழறிஞர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “செம்மொழி மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்த ரஷ்ய நாட்டுத் தமிழறிஞர், ஆய்வாளர், பேராசிரியர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி. அவரது மறைவு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பு ஆகும்.
சோவியத் யூனியனில் உள்ள பகுதிகள் தனித்தனியாகப் பிரிந்த பின்பு, தமிழ்மொழி சார்ந்த பதிப்புகள் குறைந்து போனது. அப்போது, பேராசிரியர் துப்யான்ஸ்கி தனது சொந்த செலவில் தமிழ் வளர்த்தார். அரை நூற்றாண்டு காலமாகத் தமிழ் ஆய்வுப் பணியை மேற்கொண்டு, பல சிறப்பு கட்டுரைகளை வழங்கியுள்ளார்.
கடந்த 2010-ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் தலைமையில் கோவையில் நடைபெற்ற செம்மொழி ஆய்வு மாநாட்டில் பங்கேற்று, தொல்காப்பியம் குறித்த ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்து, தலைவர் கலைஞரின் அன்பைப் பெற்றவர் பேராசிரியர் அலெக்ஸாண்டர் துப்யான்ஸ்கி. அவரது மறைவுக்கு திமுக தலைவர் என்ற முறையிலும், கலைஞரின் மகன் என்ற முறையிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்