அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய கோரி இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்!!!

பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியர் தேர்வுகள் ரத்து மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பா அதிருப்தி தெரிவித்திருந்தார். குறிப்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் செய்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அவர் மீது புகார்கள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டது.

எனவே சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக்குழுவை தமிழக அரசு அமைத்தது. மேலும் மூன்று மாதங்களில் இந்த விசாரணைக்குழு அறிக்கை அளிக்கவும் அரசு உத்தரவிட்டது.
ஆசிரியர் பணி நியமனத்தில் 280 கோடி ஊழல் செய்த, மாணவர் நலனுக்கு எதிராக செயல்படும் சூரப்பாவை பதவிநீக்கம் செய்! – SFI நடத்திய அண்ணா பல்கலை முற்றுகைப் போராட்டம் #SFI #SFIProtest #AnnaUniversity #Corruption More : https://t.co/BRQGCli57f @TamilnaduSfi pic.twitter.com/EHpJAzEKBn
— CPIM Tamilnadu (@tncpim) November 20, 2020
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது ரூ.280 கோடி வரை நிதி மோசடி புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதால் விரிவான விசாரணை நடத்தப்படும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் கூறினார். இந்நிலையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய கோரி பல்கலைக்கழகம் எதிரே இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது