மசாஜ் சிகிச்சை என்ற பெயரில் 6 பவுன் நகையை கொள்ளை அடித்த மர்ம நபர்கள்!!
![](https://thambattam.com/storage/2020/11/theft-780x470.jpg)
கண்ணமங்கலத்தை அடுத்த காட்டுக்காநல்லூர் மந்தைவெளி பஸ் நிறுத்த பகுதியை சேர்ந்த பழனி மனைவி காசியம்மாள். நேற்று காலை இவர்களது வீட்டுக்கு சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆணும், ஒரு பெண்ணும் மோட்டார்சைக்கிளில் வந்து மூட்டு வலிக்கு சிகிச்சையளிப்பதாக கூறிஉள்ளனர்.
இதை நம்பிய காசியம்மாள், அவர்கள் இருவரையும் வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். வீட்டுக்குள் சென்றதும் அவர்கள் காசியம்மாளுக்கு மயக்க மாத்திரை கொடுத்து, மசாஜ் சிகிச்சை அளித்துள்ளனர். இதனால் சிறிது நேரத்தில் காசியம்மாள் மயங்கி விட்டார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காசியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்துக்கொண்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர். மயக்கம் தெளிந்த காசியம்மாள், தனது கழுத்திலிருந்த நகையை அந்த மர்ம நபர்கள் பறித்துச்சென்றதை அறிந்து கூச்சலிட்டார்.
இது குறித்து கண்ணமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்ம நபர்கள் வந்து சென்றது பதிவாகி இருக்கிறதா என போலீசார் ஆய்வுசெய்து வருகின்றர்.