இந்தியாவில் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த துடிக்கும் மத்திய பாஜக அரசு… கொதித்தெழும் மக்கள்…!

இந்தியாவில் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது நாடு முழுவதும் 8 மணி நேர வேலைதான் நடைமுறையில் உள்ளது. வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். எனவே நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் என வாரம் ஆறு நாட்களுக்கு 48 மணி நேர வேலை, ஒரு நாள் ஓய்வு என்ற நடைமுறை உள்ளது.

இந்நிலையில் பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த பரிந்துரை செய்துள்ள மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சரம் அதற்கான வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக எல்லா சட்டங்களிலும் தொடர்ந்து திருத்தம் கொண்டு வருகிறது. அந்த வகையில் தொழிலாளர் நலச்சட்டங்களிலும் திருத்தம் செய்யப்படுகிறது. பணியின் போது பாதுகாப்பு, சுகாதாரம், பணிக்கான சூழலை மேம்படுத்துவது தொடர்பான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இது தொடர்பான வரைவு ஆணையை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதில் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x