அமித் ஷா வருகையால் ஆம்புலன்ஸ் வாகனத்தை பல மணி நேரம் மிரட்டி, நிறுத்தி வைத்த போலீசார்!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையால் சென்னையில் பல மணி நேரம் வாகன போக்குவரத்து தடைப்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அரசு முறை பயணமாக தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். தமிழக மக்களுக்கு எதிராகவே எப்போதும் செயல்படும் மத்திய பா.ஜ.க அரசுக்கு மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், தமிழகம் வந்த அமித்ஷாவுக்கு தமிழக மக்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக இன்று காலை முதலே அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ட்விட்டரில் #GoBackAmitShah என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. இதுஒருபுறமிருக்க, தமிழகம் வரும் அமித்ஷாவிற்கு கூட்டத்தைக் காட்டுவதற்காக கூட்டம் சேர்க்க முடியாத பா.ஜ.கவிற்கு அ.தி.மு.க தங்கள் கட்சி தொண்டர்களை அனுப்பி ஆதரவு அளித்துள்ளது.
அமித்ஷாவை வரவேற்க பா.ஜ.க தொண்டர்களை விட, அ.தி.மு.க தொண்டர்கள் பலர் கையில் அ.தி.மு.க கொடிகளுடன் கூடியிருந்ததைப் பார்த்த பொதுமக்கள், “இது அண்ணா.திமு.கவா அல்லது அமித்ஷா.தி.மு.கவா ?” என கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதுமட்டுமின்றி, தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது கொரோனாவைக் காரணம் காட்டி, கைது செய்யும் எடப்பாடி அரசுக்கு இப்போது கொரோனா கண்ணுக்குத் தெரியவில்லையா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஒருவழியாக விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அமித்ஷா சாலையின் இரு ஓரங்களிலும் நின்ற பா.ஜ.க மற்றும் அதி.மு.க தொண்டர்களை பார்த்து கை அசைத்தவாறே சிறிதுதூரம் நடந்து சென்றார். அப்போது கூட்டத்தில் நின்ற ஒருவர் அமித்ஷா மீது பதாகையை வீசினார்.
இதனால், அங்கிருந்த பாதுகாப்பு போலிஸார் திகைத்து அந்த நபரை கைது செய்து அழைத்துச் சென்றனர். அமித்ஷா மீது பதாகை வீசிய நபர் சென்னையைச் சேர்ந்தவர் என்றும் மனநிலை பாதிப்படைந்தவர் எனவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்

மேலும், அமித்ஷா வருகை தரும் சாலையை முழுவதுமாக முடக்கிய சென்னை போக்குவரத்து போலீஸார், ஒருபக்கம் முழுவதும் வாகனத்தை இயக்கவே அனுமதிக்கவில்லை என வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாது, விமான நிலையத்தின் வெளியே உள்ள சாலையில், பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க தொண்டர்கள் அதிகளவில் குவிந்தததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Chennai fulla traffic 🙄😭 that ambulance sound 💔 pic.twitter.com/bXVRSo2xEz
— Sonia Arunkumar (@rajakumaari) November 21, 2020
இந்த நெரிசலில் நோயாளிகளுடன் சென்ற தனியார் ஆம்புலன்ஸ் சிக்கியது. நீண்ட நேரம் ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டதால் அங்கிருந்த போக்குவரத்து போலீஸார் ஆம்புலன்ஸ் சத்தத்தை நிறுத்திவைக்குமாறு மிரட்டியுள்ளனர்.